இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்வி தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த கடந்த மே மாதம் 14 ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்ததையடுத்து பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், செப்டம்பர் மாதம் முதல் ஆண்டுக்கு 30 கோடி கொரோனா தடுப்பூசியை தயாரிக்கவுள்ளதாகவும், சீரம் நிறுவனத்திற்கு ஸ்புட்னிக் வி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பகிரும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் ரஷ்யாவின் நேரடி முதலீடு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.