கொரோனா மூன்றாவது அலை தவிர்க்கமுடியாதது என்பதால் மத்திய- மாநில அரசுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கோவிட் கால கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்க விட்டு மக்கள் திரள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இது மூன்றாவது அலைக்கான காரணமாக மாறக்கூடும் என்பதால், மக்கள் திரளாகக் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவர்களின் கடும் முயற்சி காரணமாக, நாடு தற்போது இரண்டாம் அலை தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது அலை எழுவதைத் தவிர்க்க முடியாவிட்டாலும் அதன் பாதிப்பைத் தடுக்க முடியும் என்று இந்திய மருத்துவக் சங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.