மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் என்று கடுமையான நிபந்தனையுடன் தொழிலதிபர் மெகுல் சோக்சிக்கு டொமினிக்கன் உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
சிகிச்சைக்காக அவர் ஆண்டிகுவா செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவால் தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளியான மெகுல் சோக்சி, அத்துமீறி நுழைந்தது உள்பட பல்வேறு வழக்குகளில் டொமினிக்கன் தீவில் சிக்கியுள்ளார்.
அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லக் கோரி ஜாமீன்மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஜாமீனில் சோக்சியை விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.