கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ஜிகா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும், ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரிவிலும் சோதனை வசதிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று 22 மாதக் குழந்தை, 46 வயது நிரம்பிய ஒருவர் மற்றும் 29 வயதான சுகாதாரப் பணியாளர் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கூறிய வீணா ஜார்ஜ், கேரளாவில் இதுவரை 18 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.