தமிழ்நாடு, மேற்குவங்கம், உத்தரகாண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று விகிதம் 10 விழுக்காட்டுக்கும் மேல் இருப்பதாக மத்திய உள்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மலைப் பிரதேசங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா தலைமையில் காணொலி மூலம் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அஜய் குமார் பல்லா, மலைப் பிரதேசங்கள் மற்றும் இதர சுற்றுலாப் பகுதிகளில் கொரோனா நடத்தை விதிமுறை பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
2வது அலை இன்னும் முடியாத நிலையில் சுகாதார நடைமுறைகளை மாநிலங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.