டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக ஆளுநர் பன்வாரிலால் டெல்லி சென்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசிய அவர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்தார்.
இந்நிலையில், மாலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்திற்கு சென்று புரோஹித் சந்தித்துப் பேசினார்.
அப்போது தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆளுநர் எடுத்துரைத்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.