கேரள அரசு தொடர்ந்து தொல்லை அளிப்பதாக கூறி வந்த பிரபல கீடெக்ஸ் ஆயத்த ஆடை நிறுவனம் அங்கிருந்து மாறி தெலங்கானாவில் ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீட்டை துவக்கி உள்ளது.
எர்ணாகுளத்தில் இயங்கி வந்த கீடெக்ஸ் நிறுவனம், உலகின் இரண்டாவது பெரிய குழந்தைகள் ஆயத்த ஆடை தயாரிப்பாளராக உள்ளது. கடந்த 6 மாதங்களில் கேரள அரசு இந்த நிறுவனத்தில் 11 முறை ரெய்டுகளை நடத்தியதால், நொந்து போன அதன் அதிபர் சாபு ஜேக்கப், வேறு மாநிலத்தில் தொழிலை தொடர முடிவு செய்தார்.
9 மாநிலங்கள் அவருக்கு அழைப்பு விடுத்த நிலையில் கீடெக்ஸ் இப்போது தெலங்கானாவுக்கு இடம் பெயர்ந்துள்ளது. முதற்கட்டமாக வாரங்கல்லில் 1000 கோடி ரூபாயில் தனது தொழிலை துவக்கி உள்ளது.
3500 கோடி ரூபாய் அளவுக்கு கீடெக்ஸ் தெலங்கானாவில் முதலீடு செய்யும் என கூறப்படுகிறது. இதனால் 30000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.