செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

வேளாண் உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Jul 09, 2021 06:23:44 AM

வேளாண் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் விதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர். தென்னை விவசாயத்தை அதிகரிக்கும் விதமாக தென்னை வாரியம் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

கள நிலவரத்தை அறியும் விதமாக, வாரிய தலைவர் விவசாய சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார் என்று அவர் குறிப்பிட்டார். அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் மண்டிகள் வலிமைப்படுத்தப்படும் என்றும், இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா தொற்றின் 2வது அலையில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்கும் விதமாக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த அவசர நிதியாக 23 ஆயிரத்து 123 கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

நாட்டில் 736 மாவட்டங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும், கொரோனா நிவாரண நிதியில் இருந்து இதற்காக ஐசியு வசதியுடன் 20 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்படும் என்றும் மாண்டவியா அறிவித்தார்.


Advertisement
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி

Advertisement
Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?


Advertisement