கேரளாவின் திருவனந்தபுரத்தில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் ஜூன் 28ஆம் தேதி காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு, பரிசோதனையில் ஜிகா வைரஸ் உறுதியானதையடுத்து 19 பேரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனிடையே, 13 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கொசுக்கடி மூலம் அதிகம் பரவக்கூடிய இது பாதித்தால், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் 2 முதல் 7 நாட்களுக்கு நீடிக்கும் என தெரியவந்துள்ளது.