தனியார் மருத்துவமனைகள் தினசரி பயன்பாட்டை விட மூன்றுமடங்கு கொரோனா தடுப்பூசிகளை வாங்கிக் கொள்வதற்கான வரம்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது.
முன்பு இருமடங்கு கையிருப்பு வைக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது. கோ-வின் இணையதளம் வாயிலாக புதிய தடுப்பூசி ஆர்டர்களை அளிக்கலாம் என்று மத்திய அரசு அதிகாரிகள் தனியார் மருத்துவமனைகளுக்குத் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசித் தட்டுப்பாடால் ஜூலை முதல் தேதி தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுக்க முடியாத நிலை இருந்தது.
அடுத்த சில நாட்களில் இம்மாதத்திற்கான நான்கு தவணைகளுக்கும் ஒரே ஆர்டராக தரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.