கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் மருந்துகளில் மேலும் இரண்டு புதிய மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
Tocilizumah,Sarilumah ஆகிய இரண்டு மருந்துகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணம் நேராமல் தடுப்பதாகவும் வெண்டிலேட்டர் தேவையை குறைப்பதாகவும் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க மருத்துவக் கழகத்தின் பத்திரிகையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு இந்த மருந்துகளுக்குப் பரிந்துரை வழங்கியிருப்பதாக அந்தப் பத்திரிகையின் ஆசிரியரான லண்டன் பேராசிரியர் மனு சங்கர் ஹரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்த கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் இவைதாம் என்பது குறிப்பிடத்தக்கது