புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் 43 பேரில் 36 பேர் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த அமைச்சரவையில் 43 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவார். மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இளம் தலைவர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சர்களின் சராசரி வயது 61-இல் இருந்து 58-ஆக குறைந்துள்ளது.
மத்திய அமைச்சரவையில், 72 வயது நிரம்பிய சோம் பிரகாஷ் மூத்த அமைச்சராக உள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலம், கூச்பிகார் மக்களவை எம்.பி. நிசித் பிரமாணிக் 32 வயதுடன் இளம் அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.