புதிதாக பதவி ஏற்ற மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகனுக்கு தகவல் ஒலிபரப்பு துறை வழங்கப்பட்டுளளது.
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தன் பதவி விலகியதை அடுத்து, அந்த பதவி மன்சுக் மாண்டவியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரசாயனம் மற்றும் உரத்துறையையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்பானந்த சோனோவால் விளையாட்டு, கப்பல் மற்றும் நீர் வழிப்போக்குவரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அஷ்வினி வைஷ்ணவ் ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எலக்ட்ரானிஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், கல்வி மற்றும் திறன் மேம்பாடு துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பெட்ரோலியத்துறை, முன்பு விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் பூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ, சட்டம் மற்றும் நீதித்துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்ற தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகனுக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை வழங்கப்பட்டுள்ளது. மீன்வளம் மற்றும் கால்நடைத்துறையும் அவருக்கு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
கிஷன் ரெட்டி சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவுத் துறையை, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரத்துஐற அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயலுக்கு, கூடுதலாக டெக்ஸ்டைல் துறை வழங்கப்பட்டுள்ளது.