குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிங்கங்கள் சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற வீடியோ இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஆசிய சிங்கங்களின் ஒரே புகலிடமாக இருப்பது குஜராத்தின் கிர் வனப்பகுதி. இதனை ஒட்டியுள்ள அம்ரெலி மாவட்டத்தின் வனப்பகுதியில் இருந்து 3 பெண் சிங்கங்களும், 2 குட்டிகளும் வெளியேறின. பின்னர் அந்த சிங்கக்கூட்டம் பிபாபவ் சாலையில் சிங்கநடை போட்டு ஒய்யாரமாக நடந்து சென்றன.
இரவு நேரம் என்பதால் போக்குவரத்து ஏதுமில்லாததால் சிங்கங்களின் சிங்க நடை நீண்ட நேரம் நீடித்தது. இந்த வீடியோவை இணையத்தில் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.