இந்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், பாதகமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என டுவிட்டர் நிறுவனத்தை டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பான விசாரணையில், குறைதீர்க்கும் அதிகாரியை நியமிக்காமல், டுவிட்டர் நிறுவனம் வேண்டுமென்றே பிடிவாதமாக இருப்பதாக நீதிபதி ரேகா பிள்ளை கூறினார். ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்தவர் ராஜினாமா செய்து 15 நாட்கள் ஆன பின்னரும் புதிய அதிகாரியை நியமிக்காதது ஏன் என அவர் டுவிட்டர் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
புதிய டிஜிட்டல் விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து 40 நாட்கள் ஆனபிறகும் அது குறித்து மவுனம் காப்பதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இனியும் மழுப்பாமல் தனது நிலைப்பாட்டை டுவிட்டர் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.