கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 15 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 7 பேர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்வப்னா ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், தங்கக் கடத்தல் வழக்கு விசாரணை முடிவில்லாமல் நீடிப்பதால் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.