பிரம்மபுத்திரா ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதாக அசாம் மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நீர் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், அசாம் மற்றும் அருணாச்சலப்பிரதேச மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பிரம்மபுத்திரா ஆற்றில் 10 முதல் 20 அங்குலம் வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அருணாச்சலப்பிரதேசத்தின் ஜோனாய் மண்டலத்தில் வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மழை தொடர்ந்தால் சில கிராமங்கள் ஆற்றில் மூழ்கும் நிலை ஏற்படலாம் என்றும் மத்திய நீர் ஆணையம் எச்சரித்துள்ளது.