மேகதாது அணைத் திட்டத்தைத் தமிழக அரசு எதிர்த்தால் அதைச் சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாகக் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மேகதாது அணைத் திட்டம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதில் கர்நாடக எல்லைக்குள் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளதாகவும், நீர்த்தேக்கத்தால் மூழ்குவதும் கர்நாடக நிலப்பகுதி தான் என்றும் குறிப்பிட்டார்.
கிருஷ்ணராஜ சாகருக்குப் பிறகு கர்நாடகத்தில் வேறு அணைகள் இல்லை என்றும், மேகதாது திட்டத்தைத் தமிழகம் எதிர்த்தால் அதைச் சட்டப்படி கர்நாடகம் எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.