ராணுவத் தளபதி எம் எம் நரவனே இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகளுக்கு 4 நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் செல்கிறார்.
இன்றும் நாளையும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் அவர், அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர், ராணுவத் தளபதி மற்றும் இதர உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இரண்டாவது பயணமாக வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், இத்தாலி செல்லும் ஜெனரல் நரவனே, அந்நாட்டு பாதுகாப்புப்படை தலைவர் மற்றும் ராணுவ தளபதி ஆகியேரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும், இத்தாலியில் உள்ள பிரபல கேசினோ நகரில் இந்திய ராணுவ நினைவிடத்தையும், ஜெனரல் நரவனே தொடங்கி வைக்கிறார்.