மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவின் சில இடங்களில் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை 34 ஆவது தடவையாகவும், டீசல் விலை 33 ஆவது தடவையாகவும் உயர்ந்துள்ளது.
டீசலுக்கு லிட்டருக்கு 18 காசுகள் அதிகரிக்கப்பட்டதால் இந்த 3 மாநிலங்களிலும் அதன் விலை செஞ்சுரி அடித்துள்ளது. ஏற்கனவே தமிழ் நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ள நிலையில், கடைசியாக சிக்கிமிலும் அது நூறு ரூபாயை தாண்டி, நூறு ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது.
34 தடவைகளாக விலையை உயர்த்தியதால் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 11 காசுகளும், 33 தடவைகளாக விலையை உயர்த்தியதால் டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் 63 காசுகளும் அதிகரித்துள்ளது. அதாவது இந்த காலகட்டத்தில் பெட்ரோல்-டீசல் விலை 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.