வட இந்தியாவில் வீசி வந்த வெப்பக் காற்று வரும் நாட்களில் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் இருந்து புறப்பட்ட வெப்ப அலைகள் காரணமாக கடந்த சில நாட்களாக வட இந்தியா முழுவதும் கடும் வெப்பக்காற்று வீசியது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
குறிப்பாக ராஜஸ்தானில் 42 புள்ளி ஒரு டிகிரி செல்சியசும், பஞ்சாபில் 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவானது. இந்நிலையில் டெல்லியில் கனமழை பெய்ததால் அங்கு வெப்பத்தின் பாதிப்பு குறைந்து காணப்பட்டது.
வரும் நாட்களில் வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.