கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவின் இணையதளத்தில் பதிவு செய்தோ, அல்லது அருகில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கோ சென்றோ கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளில் 90 சதவீதம் பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெறாமலேயே குணமடைந்தனர்.
எனினும் கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. .