வங்கிக் கடன் மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு லண்டனுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி சுமார் 17 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துகளை இந்திய அரசுக்கு ஒப்படைத்துள்ளார்.
இதனால் அவர் கிரிமினல் நடவடிக்கையிலிருந்து விலக்கு பெற்றார். அமலாக்க இயக்குநரகம் (ED) அறிக்கையின்படி, இந்த பணம் இங்கிலாந்து வங்கிக் கணக்கில் இருந்தது. ஜூன் 24 அன்று பூர்வி மோடி அமலாக்கத்துறையை அணுகியதாக ED தெரிவித்துள்ளது.
லண்டனில் தனது பெயரில் இயங்கும் வங்கிக் கணக்கு உள்ளதாக பூர்வி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பூர்வியின் கூற்றுப்படி, இந்த வங்கிக் கணக்கு அவரது சகோதரர் நீரவ் மோடியின் உத்தரவின் பேரில் திறக்கப்பட்டதாகவும், அங்கு டெபாசிட் செய்யப்பட்ட பணம் தன்னுடையது அல்ல என்றும் பூர்வி கூறினார்.