பிற்பட்டோர் குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
கடந்த மே 5ம் தேதி மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லையென்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யும் நிலை தற்போது ஏற்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.