தீவிரவாதிகளால் மிகவும் எளிதாக வாங்கக் கூடிய டிரோன் விமானங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினருக்கு இவை புதிய சவால்களாக உருவெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். ஜம்மு விமான நிலையம் மீது இரண்டு டிரோன்கள் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட சம்பவத்தையடுத்து ரஜோரி மாவட்டத்தில் டிரோன் விமானங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் போர் உத்திகளில் டிரோன் விமானத் தாக்குதலையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ராணுவத் தளபதி நரவானே தெரிவித்தார்.
டிரோன் விமானங்களை தாக்கி அழிக்கக் கூடிய தொழில்நுட்பத்தை ராணுவம் தனது யுத்தத்தில் இணைக்கக்கூடிய நிலையை ஜம்மு தாக்குதல் சம்பவம் உணர்த்தியிருப்பதாகவும் நரவானே தெரிவித்தார்