கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தடையற்ற பயணத்திற்கான கிரீன் பாஸ் வழங்க 9 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினுக்கு கிரீன்பாஸ் அனுமதி வழங்காவிட்டால் ஐரோப்ப நாடுகளில் இருந்து கிரீன் பாஸ் எடுத்து இந்தியா வரும் பயணிகள் 15 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு ஆளாவார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை எச்சரித்தது.
இதையடுத்து ஜெர்மனி, ஸ்லோவேனியா, ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரீஸ், எஸ்தோனியா, ஸ்பெயின் ஆகிய 7 ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளும் உறுப்பினர் அல்லாத ஐஸ்லாண்ட் மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் கிரீன் பாஸ் பட்டியலில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு வரும் பயணிகளையும் இணைத்துள்ளன.