டெல்லியில் சந்தைகள், மால்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை திறக்கப்பட்டதையடுத்து தலைநகரம் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.
உணவகங்களிலும் கடைகளிலும் மக்கள் திரளாக காணப்பட்டனர். கிட்டதட்ட ஓராண்டுக்கும் மேலாக நீடித்த கொரோனா கால ஊரடங்குகளால் வீடுகளுக்குள் அடைந்து கிடந்த மக்களுக்கு இது புதிய விடுதலையாக இருந்தது.
ஆனால் பொது இடங்களில் மீண்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக நடமாடுவது கொரோனாவின் மூன்றாவது அலைக்குக் காரணமாகிவிடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லஷ்மி நகர் மார்க்கெட் போன்ற சில பகுதிகள் கொரோனா கால விதிகளை மீறியதால் மீண்டும் மூடப்பட்டன