மத்திய பிரதேசத்தில் பள்ளிக் கட்டணத்தை குறைக்குமாறு கெஞ்சிய பெற்றோரை சாகும் படி கல்வித்துறை அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள போதும் சில பள்ளிகள் முழு கட்டணத்தையும் செலுத்தச் சொல்வதால், அது குறித்து புகாரளிப்பதற்காக பெற்றோர் சிலர் கல்வித்துறை அமைச்சர் இன்டெர் சிங் பார்மரை (Inder Singh Parmar) அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர்.
அப்போது ஒருவர் பள்ளிகள் முழு கட்டணத்தையும் செலுத்தச் சொல்வதால் தங்களுக்கு சாவதை தவிர வேறு வழி இல்லை என அமைச்சரிடம் தெரிவித்தார். அவரை போய் சாகும் படி கூறிவிட்டு அமைச்சர் காரில் புறப்பட்டு விட்டார். அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்து அமைச்சரின் அலட்சியப் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்தன.