கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த உறவினர்களுக்கு கேரள அரசு அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாதது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
இதனை நிவர்த்தி செய்ய உயிரிழந்தவர்களின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லவும், உரிய மதச் சடங்குகளை மேற்கொள்ளவும் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஊரடங்கை எப்போதும் அனுமதிக்க முடியாது என்பதால்தான் தளர்வுகள் அனுமதிக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.