மகாராஷ்ட்ராவில் செல்போன் நெட்வொர்க் கிடைப்பதற்காக மரத்தில் ஏறிய 15 வயது சிறுவன் மின்னல் தாக்கி உயிரிழந்தான்.
பால்கர் (Palghar) மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் கால்நடை மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு சென்றனர்.
அப்போது செல்போனில் நெட்வொர்க் கிடைக்காததால் 4 பேரும் மரத்தில் ஏறிய நிலையில் அவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் ரவீந்திர கோர்டா என்ற சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.