நாடு முழுவதும் கருப்புப் பூஞ்சை நோய்க்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பாக உயர்மட்ட மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் ஏனைய அமைச்சர்களான ஹர்தீப் எஸ் பூரி, நித்யானந்ராய் மற்றும் அஸ்வினி குமார் சவ்பே உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஹர்ஷவர்தன் நாடு முழுவதும் கருப்புப் பூஞ்சை நோய்க்கு இதுவரை 3 ஆயிரத்து 129 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.