இந்திய வரைபடம் தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அந்தப் படத்தை தனது பக்கத்தில் இருந்து ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை தனித் தனி நாடுகள் போல சித்தரித்து ட்விட்டர் வலைதளத்தின் தொழில் பிரிவின் கீழ் ட்வீப் லைஃப் பிரிவில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து சர்ச்சைக்குரிய இந்திய வரைபடத்தை தனது பக்கத்தில் இருந்து ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு லடாக் தலைநகரான லே-வை சீனாவின் பகுதியாக டுவிட்டர் சித்தரித்து அதற்கு இந்தியாவின் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.