12 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அளித்த தரவுகளின் படி இதை தெரிவித்துள்ள மத்திய அரசு, ஏப்ரல் முதல் இதுவரை 45 ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை சோதித்ததில், 48 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியானதாக தெரிவித்துள்ளது.
டெல்டா பிளஸ் நாட்டில் ஒட்டு மொத்தமாக பரவிவில்லை எனவும் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய மிரதேசத்தில் மட்டுமே அதன் பரவல் அதிகமாக இருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு உள்ள மரபணு மாற்ற வைரசுகளைவிடவும் அதிவேகத்தில் டெல்டா பிளஸ் பரவும் என்றும், பல நாடுகளில் உள்ள தடுப்பூசி மற்றும் மருந்துகளையும் எதிர்த்து பரவும் திறன் அதற்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.