ஜம்முவில் உள்ள விமானநிலையத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் டிரோன் விமானங்கள் மூலம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலையடுத்து விமான நிலையத்துக்கு கமாண்டோ படைகளின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தூரம் அமைந்த இந்த விமான தளத்தைக் குறிவைத்து டிரோன்கள் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விமானங்களைக் கட்டுப்படுத்தும் ஏர் டிராபிக் கண்ட்ரோல் அறையை தகர்க்க தீவிரவாதிகள் முயற்சி செய்திருக்கலாம் என்றும் அல்லது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வெடிமருந்துகளின் அதிக எடை காரணமாக ட்ரோன்கள் வழிமாறிச் சென்று வெடித்திருக்கலாம் என்றும் ஐயம் எழுப்பியுள்ளனர்.