தடுப்பூசி போட தயக்கம் காட்டுவது ஆபத்தானது என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது மாதாந்திர வானொலி உரையான மனதின் குரலில் இவ்வாறு கூறிய மோடி, மக்கள் அச்சத்தை துறந்து விட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அறிவியலையும், நமது விஞ்ஞானிகளையும் நம்ப வேண்டும் என்ற அவர், பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
தடுப்பூசி பற்றிய எதிர்மறையான வதந்திகளை நம்பாதீர்கள் என்றார் மோடி. மத்திய பிரதேச கிராமம் ஒன்றின் மக்களுடன் உரையாடிய மோடி, அச்சங்களை கைவிட்டு தடுப்பூசி போடுமாறு அறிவுரை வழங்கினார். கொரோனாவுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது என்ற அவர், கடந்த 21 ஆம் தேதி சாதனை அளவாக தடுப்பூசி போடப்பட்டதாக கூறினார்.