போலி தடுப்பூசி முகாம்களை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளதாக, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்து தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், Co-WIN தளத்தில் பதிவு பெற்ற அமைப்புகள் மட்டுமே தடுப்பூசி முகாம்களை நடத்த அனுமதி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதையும் மீறி அனுமதி இல்லாமல் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவிலும்,மேற்கு வங்கத்திலும் போலி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகமும் அறிவுறுத்தி உள்ளது.