முன்னாள் படைவீரர்களின் நலன் காக்கவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக லடாக் சென்றுள்ள ராஜ்நாத் சிங், லேயில் முன்னாள் படைவீரர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஒரே பதவி ஒரே ஓய்வுதியம் என்னும் முப்படையினரின் கோரிக்கையைப் பிரதமர் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னாள் படைவீரர் நல இயக்ககம் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
படைவீரர்கள் நாட்டைக் காப்பதால், அவர்களின் நலனைக் காப்பதே அரசின் இலக்கு என்றும், முன்னாள் படையினரின் குறைகளைக் கேட்கத் தொலைபேசி உதவி மையம் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.