வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் மீண்டும் பக்தர்களுக்காக இன்று முதல் திறக்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ள புதிய வழிகாட்டல் நெறிகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. கடுமையான கோவிட் கால கட்டுப்பாடுகளுடன் கோவிலைத் திறக்க அனுமதியளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று பெற வேண்டும்.சமூக இடைவெளியை கடைபிடித்து கோவிலுக்குள் செல்ல வேண்டும். சிவபெருமாளுக்கு நீரால் மட்டும் ஆராதனை செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.