மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே ஆகியோர் இன்று முதல் லடாக்கில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லைப் பாதுகாப்பை ஆய்வு செய்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு எல்லையில் படைக்குறைப்பு பிரச்சினை குறித்து அரசு தரப்பிலான பேச்சுவார்த்தை சீனாவிடம் நடைபெற்றது. எல்லையை இணைக்கும் சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லையோர படையினரின் கட்டுமானப் பணியை ராஜ்நாத்சிங் பார்வையிடுவார்.
மலைப் பிரதேசங்களிலும் சிகரங்களிலும் இந்திய ராணுவத்தின் வியூகங்கள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்குவார்.எந்த வித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் எல்லையில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் என்று சீனாவும் இந்தியாவும் பரஸ்பரம் உறுதி செய்துக் கொண்டுள்ளன.