அதிக வீரியம் உள்ள உருமாற்ற கொரோனா வைரசுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் பாதுகாப்பை அளிக்காமல் போகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டு, கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கலாம் என, எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், தொற்றும்தன்மை அதிகம் உள்ள டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வைரசுகளுக்கு எதிராக இதனால் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றார்.
எந்தெந்த தடுப்பூசிகளை ஒன்றாக போடலாம் என்பதை குறித்து ஆய்வு நடத்தவேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.