செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொரோனாவுக்கான "2டிஜி" மருந்து..! எப்போது சந்தைக்கு வரும்? உயர்நீதிமன்றம் கேள்வி

Jun 25, 2021 09:50:05 PM

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கொரோனா சிகிச்சைக்காக கண்டுபிடித்த 2 டிஜி மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கொரோனா சிகிச்சைக்காக 2 டிஜி என்ற மருந்தைக் கண்டுபிடித்தது. அதனை உடனடியாக சந்தைக்குக் கொண்டு வரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் 2  டிஜி மருந்தை உற்பத்தி செய்ய ஒரு ஆய்வகத்துக்கு மட்டும் அனுமதியளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 2 டிஜி மருந்தை உற்பத்தி செய்ய 40 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும், அந்நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆந்திரா மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கொரோனா குணப்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் அழைத்து பேசி, அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா ? எனக் கேள்வி எழுப்பினர். சர்வதேச மருந்து மாபியாக்கள் காரணமாக ஆந்திர மருந்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா சர்வதேச அளவில் புகழடைந்திருப்பார் என்றும் தெரிவித்தனர்.

அதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக விளக்கமளித்தார்.

இதையடுத்து 2 டி ஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.


Advertisement
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement