இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டால் தான் அரசு வேலையும், அரசின் திட்ட உதவிகளும் கிடைக்கும் என்ற மசோதா அடுத்த மாதம் நடக்கவுள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.இந்த கொள்கை முடிவு ஏற்கனவே அசாம் உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இருந்து குடியேறி உள்ள முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருக்கத்தை தடை செய்யும் நோக்கத்தில் அசாம் மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஏற்கனவே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தேயிலைத் தோட்டங்களில் வேலைபார்க்கும் அசாம் பழங்குடியினருக்கு இந்த கொள்கை பொருந்தாது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.