ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் தயாரித்துள்ள முதல் மின்சார காரான, ஆடி இ டிரான் விற்பனை, இந்தியாவில் ஜூலை 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலக சந்தையில் 17,641 இ டிரான் கார்கள் விற்பனையாகி உள்ளன. 71.2 கிலோவாட் பேட்டரி உள்ள இந்த கார், 6.8 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி விடும் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும்.
ஒரு முறை காரை சார்ஜ் செய்தால், 282 முதல் 340 கிலோ மீட்டர் வரை காரை இயக்க முடியும் என்று ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விற்பனைய விலை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் முதல் ஆரம்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.