மகனுக்கு 18 வயது நிறைவடைந்தால் தந்தையின் கடமை முடிந்து விடுவதில்லை எனக் கூறியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், பட்டப்படிப்பு முடிக்கும் வரை அல்லது வருமானம் ஈட்டத் தொடங்கும் வரை வாழ்க்கைச் செலவுக்கான தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது.
கணவனைப் பிரிந்து 2 பிள்ளைகளுடன் வாழும் பெண் வாழ்க்கைச் செலவுக்கான தொகை வழங்கக் கோரித் தொடுத்த வழக்கில் மகனுக்கு 18 வயது நிறைவடைந்து விட்டதால் வாழ்க்கைச் செலவுத் தொகை வழங்க உத்தரவிடக் கீழ் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து அந்தப் பெண் தொடுத்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மகனுக்கு 18 வயது நிறைவடையும்போது தந்தையின் கடமை முடிந்துவிடாது என்றும், மகனுக்கு ஆகும் செலவு முழுவதையும் தாய் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தது. அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கைச் செலவுத் தொகையாக மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது.