தொழிற்சாலைகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதியளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை வகித்தார்.
17 அமைச்சகங்கள் மற்றும் 14 மாநிலங்களை உள்ளடக்கிய முதல் கட்ட தேசிய ஒற்றைச் சாளரத் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் தளம் வழியாக முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் தொழில் நடத்துவதற்குத் தேவையான பல்வேறு அரசு ஒப்புதல்கள், அனுமதிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் பிளாட்பாரத்தில் பதிவான விவரங்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.