புதிததாக உருமாற்றம் பெற்றுள்ள அதி தீவிரமான டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் மூன்றாவது அலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, கேரளா ஆகிய மூன்று மாநில அரசுகளை எச்சரித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், தற்போது சிறிய எண்ணிக்கையிலான பாதிப்பு போல தோன்றும் இப்பிரச்சினை பெரிதாக விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. இந்த மூன்று மாநிலங்களின் சில மாவட்டங்களில் உருமாறிய டெல்டா பிளஸ் நோய்த் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
பெரும் கூட்டங்கள், பார்ட்டிகள் போன்றவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தடுப்பூசி போடப்படுவது அதிகரிக்கப்படவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.