கொரோனாவால் உயிரிழந்தவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தவறான சான்றிதழ் அளித்தால் சான்று அளித்த மருத்துவர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இணை நோயால் இறந்தவர்கள் ஆயினும் கொரோனாவால் மரணம் அடைந்தவர் என்ற சான்றிதழை கட்டாயம் அவர் குடும்பத்தினர் பெற வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.