சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை வலுப்படுத்தவே இந்தியா புதிய டிஜிட்டல் கொள்கைகளை வகுத்துள்ளதாக ஐ.நா.சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சமூக அமைப்புகளுடன் ஆலோசித்த பிறகே புதிய கட்டுப்பாடுகள் இறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா.தபையின் மனித உரிமைக் கவுன்சிலைச் சேர்ந்த அமைப்பு சார்பில் இந்திய அரசிடம் புதிய டிஜிட்டல் சட்டங்களைப் பற்றிய விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த இந்திய அரசு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சாமான்யர்களை பலப்படுத்தவே இச்சட்டம் அமல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் அவமதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாவோர் தங்கள் புகார்களைத் தெரிவிக்க இச்சட்டம் வகை செய்யும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமையாக உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.