கருப்பு பூஞ்சைக்கான மருந்து உற்பத்தி 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மண்டேவியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், கருப்பு பூஞ்சை நோயால் தற்போது வரை 27 ஆயிரத்து 142 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான ஆம்போடெரிசின்-பி மற்றும் இதர மருந்துகளின் இருப்பை உயர்த்த மத்திய அரசு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு எந்த வாய்ப்பையும் விட்டு விடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.