வைர வணிகர் மெகுல் சோக்சியைச் சிறையில் அடைக்க டொமினிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதால் மருத்துவமனையிலேயே இருப்பார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேசனல் வங்கியிடம் உத்தரவாதக் கடிதம் பெற்று வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிடம் ஆறாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கித் திருப்பி செலுத்தாமல் தப்பிச் சென்ற மெகுல் சோக்சி டொமினிக்கா காவல்துறையிடம் பிடிபட்டார்.
அவரை விசாரணைக்கு நாடு கடத்த முயன்று வரும் இந்தியா, சோக்சி வழக்கில் தன்னையும் சேர்த்துக்கொள்ளும்படி டொமினிக்கா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் அவரைச் சிறையில் அடைக்க டொமினிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.